Monday, November 2, 2009

எனக்காக எழுதப்பட்ட கவிதை !!!




பிரம்மன் படைக்க வில்லை
தேவதைகள்-போராட !!!
அதனால் தான் புலம்புகிறேன்
கணிபொரியோடு போராடாதே
நீ என்று !!!
பூ கொய்து பொன்விரல் புணனாக்கதே
மலர் சுமந்து சிவக்க வேண்டியவள் நீ
இயந்திர சாவி பலகை இயக்கி
இரும்பு திரை இட்டு கொள்ளாதே
உன் - கற்பனை உலகிற்கு
கம்பனும் தோற்று இருப்பான்
போர்களத்தில் போரிட நேர்ந்தால்
அசோகனும் வீழ்ந்து இருப்பான்
கவி புனைய நேர்திருந்தால் !!!
ஒருதரம் நீ சிரித்து பார் என் கண்ணே
தோல்வி ஓடிபோகும் உன்னிடம்
சொல்லிக்கொள்ளாமல் ....

Friday, March 13, 2009

கண்ணீருக்கும் -உனக்கும் பிணக்கோ ?


என் கண்ணீருக்கும் -உனக்கும் என்ன பிணக்கோ நானறியேன் !!!நீ - என்னை விட்டு நீங்கியதும் ...எட்டி பார்க்கிறது !!!

Friday, February 6, 2009

தொடர்ந்து வருவாயா நீ ???


முதல் சந்திப்புசின்ன இதழ் விரிப்பில் தொடங்கி இதயத்தில் தொற்றி கொண்டது... மணித்துளிகள் ,நாட்கள்,வாரங்கள்மாதங்கள் ,
வருடங்களாய்... நம்மிடையே நிகழ்ந்த தொலைபேசி அழைப்புகள் இணைந்து காபி பருகிய தருணங்கள் ...எதுவும் எப்போதும் தொடரப்போவதில்லை ...

ப்ராஜெக்ட் டெலிவரி -ஆன்சைட் மீட்டிங் அப்பரைசல் டிஸ்கசன்எந்தன் ஓய்வில்லா அலுவகளிடையே -நம்மின் அழைப்புகளும் சிரிப்புகளின் இடைவெளிகள் அதிகமிருக்கலாம் !!!!அகன்றுபோக அனுமதித்ததில்லை நான்!
பயணங்களில் புதிய உறவுகளும் நட்புகளும் மலர்ந்திருக்கலாம் ...பதியன் போட்டு வளர்ந்து பதிந்து போன நம் நட்பை பழயதன மறுப்பேனோ ????

ஸ்கொர்பிஒ வில் சென்றாலும் தாயின் கைவிரல் பற்றி தளர் நடை பயின்ற நிமிடங்கள் என்றும் இனிய நினைவுகள் ...என் இதயத்தில் உன் நட்பை போல் !!! நேற்று என்னை பற்றி விசாரித்து எனக்கு மெயில் அனுப்பினாய் -இன்றுயாரைப்பற்றியோபார் வார்டு மெயில் !!!
நாளை உன் அட்ரஸ் பூக்கில் இருந்துவிலகி போக விரும்பவில்லை நான் !!!!நீ ?????

எந்த ஊடகம் உன்னையும் என்னையும் விலக்கியது எந்த நினைவு அலைகள் நம்மை அகற்றியது ???
நீ அழைப்பாய் என நானும்நான் தொடர்வேன் என் நீயும் காத்திருந்த நொடிகள் மாதங்களாய் மாறிபோனதும்
உணர்ந்து விட்டேன் -உன்னை தொட்டு விட்டேன் நான் தொடர்ந்து வருவாயா நீ ???

Wednesday, September 24, 2008

வாழ்வில் வால்பாறை

சாலைப் பயணம் ....
கண்ணுக்கெட்டிய வரை
வழுக்கிசெல்லும் தார்ச்சாலை !!!
கண்ணயர்ந்து விட்டேன்
கதிரவனின் உதயத்தில்
சொர்க்கத்தை பார்ப்பேன் ...
நம்பிக்கையில் !!!
எங்கோ ஒலித்து மறைந்த
பறவையை தேடி கண்கள்
விழித்தபோது விழிகள்
விரிந்தது ......
மலைக்கன்னி மங்கலாய்
புன்னகைத்தாள்...
சுற்றிலும் பார்த்தேன்
பச்சை பட்டாடை எங்கே ?
வெறும் மேடு பள்ளங்களாய்
துயில் கொண்டதில்
துகில் கலைந்தனவோ ???
வெட்கி நான் சிரிக்கையில்
அருகே அமர்ந்தவன் என்னை
பார்த்து சிரித்தான் ....
உன்னை பார்க்க பல மணி நேரங்கள்
பயணிக்க வேண்டுமென !!!!
சட்டென துவண்டு போனேன்
இந்திர லோகம் செல்ல
வருசங்கள் காத்திருக்க
உன்னை காண மணி நேரங்கல்தானே !

"காதலனை பிரிந்து இருக்கும்
நொடிகள் தகித்து கொண்டிருக்கும் "
கவியின் வரிகள் ...

தகித்து நீண்டது என் வழி
மனதின் வெம்மை உனக்கெப்படி
தெரிந்தது ???

சுட்டெரிக்கும் சூரியனை ஏமாற்றி
சில்லிய தென்றலை
எப்படி அனுப்பி வைத்தாய்
என்னை நோக்கி !!!

கூந்தலோடு தென்றல் இட்ட
ஊடலில் சிரித்து மயங்கி
நின்றேன் !!!!

இதோ
நெருங்கியும் விட்டேன்
கற்பனையை தாண்டிய
கலையடி நீ !!!

உன் அபாய வளைவுகள்
ஒவ்வன்றும் அதிர செய்ததடி
இத்தனை அழகிய வளைவுகளை
இறைவன் எத்தனை யுகங்களாய்
செதுக்கினான் என்று !!!
எண்ணியவாறு என்னையும் பார்த்து
புன்னகைத்து கொண்டேன் ..

எத்தனை வினாக்கள் என்னிடம் !!!
எந்த கவிஞன் உளறினான்
"சந்தனம் குழைத்து தந்தத்தில்
செய்த சிற்பம் அவள் மேனி "
பெண்ணை ரசிக்க தெரிந்தவனுக்கு
உன்னை ரசிக்க தெரியவில்லையடி !!!

என்னை வரவேற்கவா இத்தனை
உயர்ந்து நிற்கும் உன் அப்சரசுகளை
வரிசையாய் நிற்க வைத்தாய் !!!

ஒவ்வொன்றும் அம்புல்லியை
அரைத்து வார்த்த அச்சுக்கள்-மரகதங்களை
அள்ளி தெளித்து பதித்து வைத்த
பொக்கிஷங்கள் -எவனடி
பெயர் வைத்தான் இவைகளுக்கு
மரங்கள் என்று ???

பூ போட்ட ஜாடியில்
பார்த்து படித்து வளர்த்த
என் வீட்டு ரோஜாக்களை காட்டிலும்
சாலை யோரமாய் வேலியே
இல்லாமல் சிவந்து சிரிக்கும்
உன் ரோஜாக்களுக்கு என்ன ஊட்டினாய்???

உன் பசுநிற மேனிக்கு -
இத்தனை மெல்லிய
வெண்ணிற ஆடை எங்கடி நெய்தாய் ???

என் இதயம் ஊடுருவி சில
கணங்கள் இழக்க செய்த
அந்திமழை யை எங்கிருந்து
இரவல் வாங்கினாய் ????


தென்றல் தான் உன்னவரா
மேக உடையை களைத்து
ரசித்து நின்றாலும் சிவந்து
தாவி தழுவிக் கொள்கிறாய் ...

எந்த நொடியில் என்னை
இன மாற்றம் செய்தாய்???

அடி எடுத்து வைத்த போது
பெண்ணே பெண்ணை ரசிக்கவைத்து ...
முடி பார்க்கும் போது
காதலனாய் என்னை மாற்றி
தீயினில் ஏனடி கருக செய்தாய் ???

இரண்டு
கண்கள் போதவில்லை
வனங்களின் வனப்பு காண

கைகள் இரண்டும்
வளரவில்லை
வளைத்து அணைத்துக்கொள்ள

உயரம் கூட
உயரவில்லை உன்
முடி கோதி இதழ்
பதிக்க

வினாக்களுக்கு விடை தேடி
அயர்ச்சியில் நின்றபோது
அந்தி சாய்ந்து விட்டது
உன்னிட மிருந்து என்னை
பிரித்துக்கொண்டேன் ....

கையில் கருவுற்றிக்கும்
கைபேசி கதறாமல் ....
கை கால்களை முடமாக்கும்
வாகனம் இல்லாமல் ...
புத்திக்கு போதை ஊட்டி
சமாதி கட்டும் தொலைக்காட்சி
அலறாமல் ....

தாயின் கருவறையை
நினைவூட்டிய நிசப்தம் ....
அந்த மணத்தை
மீண்டுமோர் முறை
நாசிக்குள் புகுத்தி சென்ற
காற்றின் வேகம் ....

உன்னை காணாதவரை
என்னை சுற்றிலும் காதல்
வெறும் உணர்வு -இன்றோ
வெற்றி கொண்ட உலகம்
ஐயோ!-
வேண்டுமடி எனக்கு
இந்த காதல் போதை !!!

நினைக்கையில் நித்திரை ஏனோ
நிழலாட மறுக்கின்றது !!!


இன்னுமோர் நொடி தாமதித்து
நின்றிருந்தால் புதைந்து
போயிருப்பேன் உன்னுள்ளே !!!

இந்த சொர்க்கம் காண
எத்தனை நரகமும்
தாண்டி உயிர்த்து வருவேன் !!!

இயந்திரம் முன்னே
இயந்திரமாய் அமர்ந்து
புரியாத மொழியில்
புதைந்து போவது கூட

நாளை உன் வளைவுகளில்
தழுவி இருக்கும் மேக உடையில்
புதைத்து கொள்ள ....



Friday, December 7, 2007

நிதர்சனம்!!!!

மென்மையனவனாய்..
ரசனையானவனாய் ...
வேண்டுமென வேண்டிருந்தேன் !!!

நீ
என் வாழ்வில் இணைந்தாய்
மென்பொருள் வல்லுநராய் !


நிசியில் மின்னும் நட்சத்திரம்
கண்டு கண்ணயர்ந்து
வைகறையின் விடிவெள்ளியைப்
பார்த்து எழப்பழகியவள்!

அதிகாலையில் அயர்ந்து
உறங்கி முற்பகலில் முகம்
பார்ப்பவன் நீ !

சைககளின் முன்னே நான் அமர
என் காதோடு -உன்
இதழ் கொஞ்சும் வார்த்தைகளில்
மதி கிறங்கிய மலைப்பயணம் !!!
மனக்கண் முன்னே ;

நீ
முதலில் கற்று கொண்டதே
காரோட்டிதான் பதினான்கு அகவையிலே!
உன் அம்மா -அன்று
பெருமை பொங்க பகிர்ந்தபோது
கலைந்துவிட்டது மலைப்பயணம்!!

உன் கரங்கள்
என் முகம் ஏந்தி ...
உன் மீசை என்னைச்
சிலிர்க்க செய்யும் கனவில்
நான் !

பளிங்கு முகமதில்
முடியோடு இருப்பது
புருவமும் இமைகளுமாய்
நீ !
காலை நேர அவதியில்
நான் ஊட்டிவிட
மாலை நேர மயக்கத்தில்
உன் கையால் வாங்கும்
கைப்பிடி சோறே
அமுதமேன்றேன் !!!

கரத்தால் உண்பதே
அநாகரீகம் என்னும்
உன்முன்னே !!

மடியினில் சாய்த்து
விரல்களால் நீ
வரையப்போகும் கோலங்களை
எண்ணி ரகசியமாய்
சிரித்த தருணங்கள் நிறைய !!

கணணியை மடியினில்
சாய்த்து மணிக்கணக்கில்
விரல்களால் அழுத்தும்போது
நானும் அழுந்தி போனனேன் !

எதிர் பாரா நொடியில்
இறுக்கி அணைப்பாஎன
எண்ணிய என்னிடம்
அதற்கும் அனுமதி
கோரினாயே!!!!
நாகரீகமாய்...
ஏக்கத்தோடு நான்
சிரிக்க
ஏளனமாய் விதி சிரித்தது :(

மனம் ஏனோ சிந்தித்தது
சில வேளைகளில்
அநாகரீகம் கூட சுகமோ என்று !!!

சீனு!!!!

பூ குவியலாய்-நீ
கண்ணயர்ந்த உறக்கம் என்னை
சிதற செய்த வேளை!
வருட எத்தனித்தேன் -நீ
விழிதிடுவயோ அச்சத்தில் அகன்றுவிட்டேன்
நீ உறங்கும் அழகு ஈர்த்து
எடுத்தணைத்து கொண்டேன் !!!
உன் ஸ்பரிசம்
விட்டு விலக நெடு நேரமானது
என் அணைப்பில் நீ நெளிந்து
எழுந்த அழகை வர்ணிக்க
வார்த்தைகளும் வசமிழந்தது!
வைரமாய் மின்னும் கண்கள்
மலரும் தோற்கும் -உன்
சந்தனச் சருமம்
செல்லமாய் சென்நாக்கால்
நீவிடும் நேரம்
மரண வலியும் வலுவிழக்கும்!
எத்தனை யுகங்கள் கண்விழித்தான்
பிரம்மன் உன்னை படைக்க....
தாமதமாய் உறங்கிய இரவுகள் .....
கிண்ணி பாலுக்கு காவலாய் நின்றிந்தேன்
நீ பருகும் வரை .............
அருகாமை தேடி அலறும்
போதெல்லாம் உன்னை
அயர்ந்து உறங்க செய்து
விலகிய தருணம் .....
நா குடித்த புட்டியில்
பால் புகட்டும் போதெல்லாம்
சிலிர்ப்பாய்....
இதழில் எழுந்த புன்னகை !
துவைத்து உலர்த்திய
தூணிகளை தொங்கி பிடித்து
சின்ன பற்களால் கிழித்து
துகிலில் நிலவை காட்டினாயே!
நிமிட எரிச்சலை
துள்ளி யோடி வேடிக்கை செய்து
சுத்தம் செய்தாயே!
உன்னை குளிப்பாட்ட நெருங்கும்
நிமிடம் எங்கடா வாங்குவாய் ?
அந்த கிலி பொங்கும் கண்களை...
கடைக்கண் பார்வை வீசி
கவனத்தை சிதரசெய்து
விளையாடும் போதெல்லாம்
' பிரியா படிக்காம
என்ன விளையாட்டு '
அம்மா அரற்றிய வேளை
எட்டி நின்று பரிகாசம் செய்வாயே !
அப்பா தரும் இயந்திர ஒளியை
இனம் கண்டு வரவேற்க
வாசலுக்கு தவுவாயே !!!!௧
என்னை கலங்கசெய்த
கவலை எல்லாம் பகிர்ந்த நேரம்
என் விழிகளை
உன் விழிகளால் அணைத்து
கேட்டிருந்த கணங்களை ...
என்னோடு சண்டையிட்டு
உதை வாங்கிய நாட்க்களை ..........
நான் கண்ணயர
நீ கண்விழித்த பொழுதுகளை ...
எப்படியடா மறப்பது ?
உருவம் முரடனாய் இருந்தாலே
என் பக்கம் பார்க்ககூட
அனுமதித்த தில்லையே !!
நான் இரும்பு கண்ணியால்
கட்டி வைத்தேன் -நீ
என்னை இமைகளுக்குள்
காத்து நின்றயாய் !!!
தொலைபேசியில் ...
உன் குரைப்பை கேட்ட பின்னே
வைப்பது வழக்கம் !!
இனி என்னை செயவேநேடா ?
நடந்து செல்லும் வழிஎங்கும்
உன் இனம் கண்டதும்
கால்கள் தடை படுதிறது !
கண்ணீர் கங்கை எட்டிப்பார்க்கிறது !!
கண்கள் நகர மறுக்கிறது !!
எந்த நட்சத்திரமாய் மின்னிக்கொண்டிருக்கிறாய்?
எமனின் பாசகையிறு -என்
இரும்பு கயிற்றை அறுத்தெறிந்து
பறித்து கொண்டதே !
என்னை பார்க்கதுடித்த
பதறி துடித்த
போகமறுத்த
வலி நிறைந்த நொடிகள்
எதனையடா ?
நேரில் கண்டிருந்தால் கரைந்திருப்பேனோ?
எந்த ஆறுதலும்
தேற்றவில்லை என்னை !
பெயரை உச்சரித்தாலே
வெள்ளமகிறது விழி !
நீ
முதலில் என்னுள் காலடி வைத்த
நாளை ...
என்னை சிரிக்கசெய்த
நிமிடங்களை நிதம் வேணும்
கனவாக ...நின்னை நினைந்து
சிந்தும் கண்ணீர் வேண்டும்
குலுங்கி நான் அழ
நிசப்தமாய் கழியும் நிமிடம் வேண்டும்
அழுது சிவந்த என்
முகத்தில் தென்றலாய்
நீ தீண்ட வேண்டும் !

எந்த இணைவும்
காவியமாவதில்லை
சின்ன பிரிவுதான்
கவிதையாகிறது!!!
என்றும் எனக்கு பிடித்த
கவிதையாய் என் இதயத்தில்
மட்டுமல்ல ; இந்த
இணையத்திலும் !!!



*தேடல்!!

நீ
என் தோள்களில் சாய்ந்திருந்தபோது
இல்லாத சுமை !
நீ
இல்லாத தோள்களில் உணர்கிறேன்!



*அரவாணி

இயற்கையின் படைப்பில்

கவனச்சிதறலால்

அதிகமாய் போன அதீத அதிசயம்!!



*பெண்

அரிதாரம் பூசாமல்

அழகாய் இருப்பது பூ மட்டும் அல்ல

பூவையும் தான்..


*மரம்

ஒற்றை காலில் தவமிருக்கும் பிறவி ஊனம் நீ!!


*ஆயுள் கைதி

~நொடி நேரத்தில்
என் விழிகள் உன் விழிகளோடு
மோதியதர்காக -
யுககைதியாய் நிற்கிறேன- நிதம்
---------------------பேருந்து நிறுத்தத்தில் !

~உன்னை பார்த்த நாட்களெல்லாம்
நொடி முள்ளாய் நகர்ந்த போது
பார்க்காத நொடிகள்
யுகமாய் கழிகிறது !!!!

~கழுவில் இட்ட கைதியாய்
விசனப்பட்டேன் - உன்
ஸ்பரிசம் தொலைந்த நொடியில் !!!!!